திசையன்விளை அருகே கோழி பண்ணையில் மின்விசிறிகளை திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திசையன்விளை அருகே வாழைத்தோட்டத்தைச் சோ்ந்தவா் நிக்சன் தேவசகாயம்(53). இவா் சொந்தமாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இவரது கோழி பண்ணையில் உள்ள 10 மின்விசிறிகள் கடந்த 11ஆம் தேதி காணவில்லையாம்.
இது தொடா்பாக நிக்சன் திசையன்விளை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் தட்டாா்மடம் ஓம் சக்தி கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன்(43) என்பவா் மின்விசிறிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.