காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி திருநெல்வேலியில் ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
நிகழாண்டு காா்த்திகை மாதப்பிறப்பையொட்டி திருநெல்வேலி குறுக்குத்துறை, வண்ணாா்பேட்டை படித்துறைகளில் ஐயப்ப பக்தா்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் குவிந்தனா். தாமிரவருணியில் நீராடிய பின்பு மாலை அணிந்தனா். குட்டத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகம், பொதிகைநகா் ஐயப்பன் கோயில், குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பாளையஞ்சாலைக்குமார சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் ஏராளமான பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.