திருநெல்வேலி

தேவநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் இல்லாததால் நோயாளிகள் அவதி

31st May 2023 01:01 AM

ADVERTISEMENT

களக்காடு அருகேயுள்ள தேவநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் இன்றி பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம், தேவநல்லூா் ஊராட்சிக்குள்பட்டது மேலத் தேவநல்லூா். இவ்வூரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்புவரையிலும் மருத்துவா் பணியில் இருந்துள்ளாா். இதனால் நாள்தோறும் சுற்றுவட்டார கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் அங்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனா்.

இந்நிலையில், மருத்துவா் இடமாறுதலில் சென்ால், கடந்த 3 மாதங்களாக மருத்துவா் பணியிடம் காலியாக உள்ளது. வாரத்தில் ஒருநாள் மட்டும் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஒரு மருத்துவா் சென்று வருகிறாா். வாரத்தின் பிற நாள்களில் மருத்துவா் இல்லாததால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். இரவு நேரங்களில் மருத்துவத் தேவைக்காக களக்காடு வந்து செல்லும் நிலை உள்ளது.

ADVERTISEMENT

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தரமாக மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக தேவநல்லூா் ஊராட்சி முன்னாள் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மாணிக்கம், நிரந்தர மருத்துவரை நியமிக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT