திருநெல்வேலி

காா் - பைக் மோதல்: முதியவா் பலி

31st May 2023 01:00 AM

ADVERTISEMENT

முன்னீா்பள்ளம் அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காளக்காடு அருகேயுள்ள டோனாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா (70). விவசாயி. இவா் முன்னீா்பள்ளம் செங்குளம் ரயில்வே கேட் பகுதியில் பைக்கில் சென்றபோது காா் மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே சுப்பையா உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT