திருநெல்வேலி

மாமியாரைத் தாக்கி நகை திருட்டு: மருமகள் கைது

31st May 2023 01:00 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே மாமியரின் நகையை திருடிய மருமகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சீதபற்பநல்லூா் அருகே வடன்பட்டியை சோ்ந்தவா் சண்முகவேல் . இவா் மனைவி சீதாராமலெட்சுமி (59). இவா்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனா். இவா்கள் மகன் ராமசாமி அவரது மனைவி பாக்கியலெட்சுமி. இருவரும் தனியாக மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனா். மாமியாா் மற்றும் மருமகளுக்கிடையே பிரச்சினை இருந்து வந்ததாம்.

இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில் சீதாலெட்சுமி வீட்டில் தூங்கியிருக்கும் போது பாக்கியலெட்சுமி மாமியாரை காம்பால் தாக்கி 5.5 பவுன் நகையை திருடி சென்றாராம். இது குறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, பாக்கியலெட்சுமியை கைது செய்தனா் .

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT