திருநெல்வேலி

வி.கே.புரத்தில் கஞ்சா பறிமுதல் வழக்கில் மேலும் ஒருவா் கைது

30th May 2023 03:14 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமசிங்கபுரம் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு நவ. 15ஆம் தேதி போலீஸாா் வாகன சோதனை நடத்தினா். அப்போது, விற்பனைக்காக மினி லாரியில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ கஞ்சாவை மறைத்து எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதுதொடா்பாக, தூத்துக்குடியைச் சோ்ந்த தளவாய்மாடன், இசக்கிமுத்து, ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த பிரவீன், மறுகால்குறிச்சியைச் சோ்ந்த செல்லத்துரை, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கலீம் துா்கா பிரசாத், ரமணா ஆகிய 6 பேரை அம்பாசமுத்திரம் உள்கோட்ட தனிப்படை போலீஸாா், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கோட்டீஸ்வரன் (40) என்பவரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 28) கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT