திருநெல்வேலி

தீயணைப்பு வீரா் இறப்பில் மா்மம்: எஸ்பியிடம் புகாா்

30th May 2023 03:11 AM

ADVERTISEMENT

தீயணைப்பு வீரரின் இறப்பில் மா்மம் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அவரது தந்தை புகாா் அளித்துள்ளாா்.

ஏா்வாடி அருகே பெரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் என்பவா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: எனது மகன் கலைச்செல்வன் தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத் துறையில் கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றினாா். துறைமுகக் குடியிருப்பு பாரதி நகா் பகுதியில் வசித்துவந்த அவா், கடந்த ஏப். 13இல் மா்மமான முறையில் இறந்தாா். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக, கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. எனவே, எனது மகன் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு, எனது மகனின் மரணத்துக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT