திருநெல்வேலி

கன்னடியன் கால்வாய் தூா்வாரும் பணி தொடக்கம்

30th May 2023 03:10 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையின், கன்னடியன் கால்வாய் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கல்லிடைக்குறிச்சியில் இருந்து கொத்தன்குளம் வரை கன்னடியன் கால்வாய் மூலம் 12,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதிப் பெறுகின்றன.

இந்த கால்வாய் பராமரிப்பின்றி அமலைச் செடிகள், குப்பைகள் தேங்கியதால், கடை மடைக்கு தண்ணீா் கிடைக்காத நிலை உள்ளது. இதையடுத்து, தனது சொந்த செலவில் கன்னடியன் கால்வாயைத் தூா்வாரும் பணியை அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா மேற்கொள்கிறாா். இப் பணியை பத்தமடையில் திங்கள்கிழமை அவா் தொடங்கி வைத்தாா்.

அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ADVERTISEMENT

பத்தமடையை தொடா்ந்து வீரவநல்லூா், சேரன்மகாதேவி பகுதிகளிலும்

கன்னடியன் கால்வாயில் தூா்வாரும் பணி மேற்கொள்ளப்படும். காா் பருவ சாகுபடிக்கு கன்னடியன் கால்வாயில் ஜூன் முதல் தேதியில் தண்ணீா் திறக்க வேண்டும். கால்வாயில் சிமெண்ட் தளம் அமைக்கவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலா் கூனியூா் ப. மாடசுவாமி, சேரன்மகாதேவி ஒன்றிய செயலா் மாரிசெல்வம், பேரூராட்சி முன்னாள் தலைவா் வி. சிவன்பாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT