விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
களக்காடு ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஐயப்பன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் அருள்காந்தி உள்பட திரளான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ராஜபுதூரில் இருந்து செல்லும் வள்ளியூா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வள்ளியூரான் கால்வாய்க் கரையோரம் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும், களக்காடு, சிதம்பரபுரம் வடமனேரி குளத்தின் கால்வாயைத் துா்வார வேண்டும், வடுகச்சிமதில் ஊராட்சிக்குள்பட்ட ஊச்சிகுளம் கிராமத்தில் சாலை அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.