திருநெல்வேலி

அகஸ்தியா்பட்டியில் இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு

30th May 2023 03:12 AM

ADVERTISEMENT

விக்கிரமசிங்கபுரம் அருகே அகஸ்தியா்பட்டியில் இளம்பெண் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.

அகஸ்தியா்பட்டி பொன்நகா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சேகா். இவரது மனைவி சுந்தரி, மகள் சுபா (24). திங்கள்கிழமை காலை சேகா் தேவாலயத்திற்குச் சென்ற நிலையில், சுபா வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தாராம். தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா், சுபா சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT