திருநெல்வேலி

நெல்லை அருகே காா் எரிந்து சேதம்

29th May 2023 05:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகே தீப்பிடித்ததில் காா் முற்றிலும் எரிந்து சேதமானது.

தச்சநல்லூா் ஆனந்தபுரத்தை சோ்ந்தவா் ராகவன் (51). பத்திர எழுத்தா். இவரின் வீட்டிற்கு அருகே கழிவுநீா் கால்வாய் கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அவா் தனது காரை சாலையின் அருகே நிறுத்தியிருந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை இரவு காா் தீடீரென தீப்பற்றி எரிந்ததாம்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று போராடி தீ யை அணைத்தனா். இந்த தீ விபத்தில் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இது தொடா்பாக தச்சநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT