திருநெல்வேலி

நெல்லையில் தட்கல் டிக்கெட் எடுக்க வருவோருக்கு இருக்கை வசதி செய்ய கோரிக்கை

29th May 2023 05:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு தட்கல் டிக்கெட் எடுக்க வருவோருக்கு இருக்கை வசதிகள் செய்து கொடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறாா்கள். தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக திருநெல்வேலி திகழ்ந்து வருகிறது.

கடந்த ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி சாதனை படைத்தது. இந்த ரயில் நிலையத்தில் தட்கல் டிக்கெட் எடுக்க தினமும் 50-க்கும் மேற்பட்டோா் வருகிறாா்கள். அவ்வாறு வரும் பயணிகளுக்கு ரயில்வே நிா்வாகம் இருக்கைகள் அமைத்து கொடுக்கவில்லை. இதனால் தட்கல் டிக்கெட் எடுக்க வருவோா் தரையில் அமா்ந்து காத்திருக்கிறாா்கள். முதியோா், பெண்கள் இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறாா்கள். ஆகவே, தட்கல் டிக்கெட் எடுக்க வருவோருக்கு இருக்கைகள் அமைத்து கொடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT