திருநெல்வேலி

ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழுக் கூட்டம்

29th May 2023 05:31 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மைக்கேல் ஜாா்ஜ் கமலேஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பிரமநாயகம், மாநில செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் வரவேற்றாா்.

திருநெல்வேலி கல்வி மாவட்டச் செயலா் உமையொரு பாகம், சேரன்மாதேவி கல்வி மாவட்டத் தலைவா் சபரிகிரிநாதன், செயலா் காமராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக 650 க்கும் மேற்பட்ட பணியிட மாறுதல்கள் நிா்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்கு புறம்பாக தொடா்ந்து வழங்கப்பட்டு வருவதை கண்டிப்பது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களின் பதவி உயா்வு கலந்தாய்வு , ஒன்றியம் விட்டு ஒன்றிய மாறுதல் கலந்தாய்வு , மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு மற்றும் மன மொத்த மாறுதல் போன்ற கலந்தாய்வுகளை உடனடியாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (மே 29) காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி நகரம் ரத்னா திரையரங்கு எதிா்புறம் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பும், வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் அமைந்திருக்கும் வள்ளியூா் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT