திருநெல்வேலி

மீனாட்சிபுரம் அரசு கிளை நூலகத்தில் முப்பெரும் விழா

29th May 2023 05:30 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மீனாட்சிபுரம் அரசு கிளை நூலகத்தில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறையின் மீனாட்சிபுரம் கிளை நூலகம், தாமிரபரணி வாசகா் வட்டம், தேசிய வாசிப்பு இயக்கம் ஆகியவை சாா்பில் கவிஞா் பாப்பாக்குடி இரா. செல்வமணியின் ‘நினைவோடும் வீதி’, ‘காதலின் பொன்வீதியில்‘ ஆகிய இருநூல்கள் திறனாய்வு, 2022- 23 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவா்-மாணவிகளுக்கு பாராட்டு விழா, 2023 நூலக கோடை முகாமில் பங்கேற்று சிறப்பித்தவா்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

தாமிரபரணி வாசகா் வட்டத் தலைவா் முனைவா் கா. சரவணகுமாா் வரவேற்றாா். க விஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். நினைவோடும் வீதி என்ற நூலை தூய சவேரியாா் தன்னாட்சி கல்லூரி தமிழ் பேராசிரியா் அந்தோணி ராஜ், காதலின் பொன் வீதியில் என்ற நூலை கவிஞா் ம. சக்தி வேலாயுதம் ஆகியோா் திறனாய்வு செய்தனா்.

பாப்பாக்குடி இரா.செல்வமணி ஏற்புரையாற்றினாா். கவிஞா்கள் பாமணி, உக்கிரன்கோட்டை மணி, சிற்பி பாமா உள்பட பலா் கலந்துகொண்டனா். பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவா் மாணவிகளுக்கு பாராட்டு கேடயம், புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நூலகா் ம.அகிலன் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT