திருநெல்வேலி

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

28th May 2023 01:28 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவி ஒன்றியம் மூலச்சியில் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் மூலச்சி சீவலமுத்துக்குமாா் தலைமை வகித்தாா். எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்ட அமைப்பாளா் குருநாதன் முன்னிலை வகித்தாா். கட்சியின் பேச்சாளா் நெல்லை மணி, சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி பூங்கோதை குமாா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வேல்முருகன், ஒன்றிய திமுக அவைத் தலைவா் வெங்கடேசன், ஊராட்சித் தலைவா்கள் சமுத்திரக்கனி (மூலச்சி), சித்ரா (மலையான்குளம்), சந்தனமாரி (தெற்கு வீரவநல்லூா்), கிளைச் செயலா் மாதவன் உள்பட பலா் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT