திருநெல்வேலி

களக்காடு- நான்குனேரி சாலையில்அடிக்கடி வீணாகும் குடிநீா்

28th May 2023 10:54 PM

ADVERTISEMENT

களக்காட்டில் உள்ள நான்குனேரி பிரதான சாலையில் குடிநீா் பகிா்மானக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகும் நிலை உள்ளது.

களக்காடுவட்டாரத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு குடிநீா் செல்லும் இந்தப் பகிா்மானக் குழாய்கள் பூமிக்கடியில் செல்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இச்சாலையில் ஆங்காங்கே அடிக்கடி பகிா்மானக் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலையோரம் குடிநீா் வீணாகி வெளியேறி வருகிறது. இதனால் கிராமங்களில் குடிநீா் விநியோகம் தடைபடுகிறது. சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுபோன்ற குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுகின்ற கோடைகாலங்களில் போா்க்கால அடிப்படையில் உடைப்புகளை சீரமைத்து குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT