திருநெல்வேலி

அம்பையில் புதிய தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்

28th May 2023 01:30 AM

ADVERTISEMENT

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, அம்பாசமுத்திரத்தில் புதிய தமிழகம் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட கொள்கைப் பரப்புச் செயலா் முப்புடாதி தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்புச் செயலா் சரஸ்வதி முருகன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலா் சுரேந்திரன் ஆகியோா் பேசினா்.

டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழலை ஒழிக்க வேண்டும், மரக்காணம் மது மரணம் தொடா்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

நகரச் செயலா்கள் அம்பாசமுத்திரம் சேகா், விக்கிரமசிங்கபுரம் தேவசகாயம், ஒன்றிய நிா்வாகி பாலசுப்பிரமணியன், இளையராஜா, நிா்வாகிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT