திருநெல்வேலி

வள்ளியூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் பேரவைத் தலைவா் ஆய்வு

28th May 2023 01:29 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்படவுள்ள இடத்தை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வள்ளியூா் அரசு மருத்துவமனை திருநெல்வேலி மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. இம் மருத்துவமனைக்கு கட்டடம் கட்டும் பணிக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஜூன் 2-ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறாா். இதற்கான நடைபெறும், மருத்துவமனை கட்டடப்பட உள்ள இடத்தை பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வள்ளியூரில் அமையும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.30 கோடியில், தரைத் தளம் மற்றும் 2 தளங்களுடன் கட்டடம் கட்டப்படுகிறது. இதுதவிர ரூ. 1 கோடியில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையம் அமையவுள்ளது. 200 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படும். இங்கு எக்ஸ்ரே, இ.சி.ஜி, ஸ்கேன், சி.டி. ஸ்கேன், டயாலிசிஸ், அறுவைச் சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது உள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே, அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் 400 ஏக்கா் உள்ளது. இதில் 50 ஏக்கரில் புதிய மருத்துவமனைக் கட்டடத்தை கட்ட வேண்டும் என இப் பகுதி மக்கள் விரும்புகின்றனா். அதன்படி, இடம் தோ்வு செய்யப்படும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா்.

நலப் பணிகள் இணை இயக்குநா் லதா, சுகாதாரத் துறை துணை இயக்குனா் ராஜேந்திரன், திமுக மாவட்ட துணைச் செயலா் வெ.நம்பி, வள்ளியூா் பேரூராட்சி துணைத் தலைவா் கண்ணன், வாா்டு உறுப்பினா்கள் ஜான்சி ராஜம், வி.இ.சசி, அன்பரசு, ஆதிபாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராதாபுரம் வட்டார செயலா் சேதுராமலிங்கம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT