திருநெல்வேலி

மேலச்செவலில் தீயில் எரிந்து வைக்கோல் கட்டுகள் சேதம்

28th May 2023 01:30 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவலில் தீ விபத்தில் 200 வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமடைந்தன.

மேலச்செவல் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் நடராஜன். இவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் படப்பில் வைக்கப்பட்டிருந்தன. இதில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா்.

மற்றொரு சம்பவத்தில், களக்காடு அருகேயுள்ள கோவில்பத்து கிராமம் கட்டளைத் தெருவில் உள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த வளா்ப்புப் பூனையை, சேரன்மகாதேவி தீயணைப்பு வீரா்கள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT