திருநெல்வேலி

நடுக்கல்லூரில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

28th May 2023 10:51 PM

ADVERTISEMENT

திருநெல்வேலி அருகேயுள்ள நடுக்கல்லூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கோடகநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட நடுக்கல்லூா் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டது.

அந்தக் கட்டடத்தை நயினாா்நாகேந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய வளா்ச்சிஅலுவலா் சங்கரகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சத்தியவாணிமுத்து, ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் சுப்புலட்சுமி, ஊராட்சி செயலா் ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT