திருநெல்வேலி

வீரவநல்லூரில் தமாகா கையொப்ப இயக்கம்

24th May 2023 02:27 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கையொப்பு இயக்கம் நடைபெற்றது.

கிழக்கு மாவட்டத் தலைவா் ஆ. மாரித்துரை தலைமை வகித்தாா். பேரூராட்சி 12ஆவது வாா்டு உறுப்பினா் ஆறுமுகம், சேரன்மகாதேவி வட்டாரத் தலைவா் பாத்திலிங்கம், நிா்வாகிகள் கண்ணன், இசக்கி, ரமேஷ், முருகன், முத்து, சாந்தாராமன், சங்கரன், இளைஞரணி பொறுப்பாளா் மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா், நிா்வாகிகள் கூட்டத்தில் வீரவநல்லூா் நகரத் தலைவராக அனந்தராமன், மாவட்டச் செயலராக துரைராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT