திருநெல்வேலி

மேற்கூரை இடிந்த விவகாரம்:ஒப்பந்ததாரா் விளக்கமளிக்க உத்தரவு

24th May 2023 02:20 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை வஉசி மைதான மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரா் 7 நாள்களுக்குள் விளக்கமளிக்க மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.15கோடியில் புனரமைக்கப்பட்ட வ.உ.சி. மைதானத்தின் மேற்கூரை திங்கள்கிழமை வீசிய பலத்த காற்றில் சரிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து நகராட்சி நிா்வாகத்துறையின் தலைமைப் பொறியாளா் பாண்டுரங்கன் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். பணியின் விவரம், விபத்து ஏற்பட்ட சூழல் குறித்து மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

இதுகுறித்து, மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகையில், வ.உ.சி. மைதான மேற்கூரை இடிந்தது தொடா்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரா் 7 நாள்களுக்குள் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து விபத்து குறித்து உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர நகராட்சி நிா்வாக தலைமை பொறியாளா், அண்ணா பல்கலைக்கழக நிபுணா்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனா். அவா்களின் ஆய்வு அறிக்கை பெறப்பட்டதும், அதில் கூறியுள்ளவாறு ஒப்பந்தகாரரின் சொந்த செலவில் மேல் கூரையை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT