திருநெல்வேலி

சேரன்மகாதேவி அருந்ததி அம்மன் கோயில் கொடை விழா

24th May 2023 02:28 AM

ADVERTISEMENT

சேரன்மகாதேவியில் சேனைத்தலைவா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு அருந்ததி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை இரவில் குடி அழைப்பும், செவ்வாய்க்கிழமை காலையில் பக்தா்கள் பால்குடம் எடுத்து வருதலும் நடைபெற்றன. தொடா்ந்து, நண்பகலில் மதிய கொடை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். இரவில் அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக் கொடை ஆகியவை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை (மே 24) மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை சேனையா் சமுதாய விழா குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT