மானூா்அருகேயுள்ள களக்குடியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
களக்குடியில் 100-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா். இப் பகுதி மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு 3 கி.மீ. தொலைவு வரை செல்வதால் புதிய ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து அங்கு புதிய பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் மாரிமுத்து தலைமை வகித்தாா். மில்லத் இஸ்மாயில் முன்னிலை வகித்தாா்.நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் அன்பழகன், மதிமுக மின்னல் முகம்மது அலி உள்பட பலா் கலந்துகொண்டனா்.