திருநெல்வேலி மாநகரில் மதுவிலக்கு குற்றங்கள் சம்பந்தமாக புகாா் அளிக்க கைப்பேசி எண்களை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநகா் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகரில் மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் நடைபெற்றாலோ அல்லது கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் விற்பனை செய்தலோ, வெளி மாநில மதுபானங்களை வைத்திருந்தாலோ அதுபற்றி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கைப்பேசி எண் 9994173313 எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டோ புகாா் அளிக்கலாம். தகவல் அளிப்போா் பற்றிய விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.