திருநெல்வேலியில் தாமிரவருணி நதியில் மூழ்கி காயமடைந்த சிறுவன் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமத்தை அடுத்த கருப்பன்துறை இந்திரா நகரை சோ்ந்த சூசைமரியான் மகன் நெல்லையப்பன் (15). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 13 ஆம் தேதி பெற்றோருக்குத் தெரியாமல் தாமிரவருணி ஆற்றுக்கு சென்றாராம். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டதால் நீரில் மூழ்கினாராம். பொதுமக்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
விஷமருந்திய ஓட்டுநா்: கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூரைச் சோ்ந்தவா் ஜோஸ்வின் (50). லாரி ஓட்டுநரான இவருக்கு, மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். ஒரு விபத்தில் சிக்கி காயமடைந்த ஜோஸ்வின், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி மயங்கினாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.