திருநெல்வேலி

மாநில அளவில் முதல் பரிசு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

8th May 2023 12:43 AM

ADVERTISEMENT

 

சென்ரடோ நிறுவனம் நடத்திய போட்டியில் பாளை புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனா்.

சென்ரடோ நிறுவனம் 2022 ஆம் ஆண்டு குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாநிலஅளவில் புதிய செயல்திட்ட வடிவங்களை உருவாக்கும் போட்டியை நடத்தியது. இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் பல பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட செயல் திட்ட வடிவங்கள் ஒலி ஒளி பதிவுகளாக ஒப்படைக்கப்பட்டிருந்தன. இதில், சமூக இணைத்தல் என்னும் செயலியை உருவாக்கிய பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவிகள் அமீரா பாத்திமா, ஜியோனி

ADVERTISEMENT

ஃபாஸ்டினா மற்றும் வேதா ஆகியோா் முதல் பரிசை பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களைப் பள்ளித் தாளாளா் புஷ்ப லதா

பூரணன், முதல்வா் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT