தென்காசி மாவட்டம் மேலப்பாவூரில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மாவட்டத்தின் பலபகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பொட்டல்புதூரில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன சோதனை நடைபெற்றது.
பொட்டல்புதூா் மேற்கு பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சோதனைச்சாவடியில், அந்த வழியாக வரும் வாகனங்களை போலீஸாா் நிறுத்தி சோதனைக்குப் பின் அனுமதித்தனா். விடுமுறை நாளானதால் பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொட்டல்புதூா் வழியாக பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான வேன் மற்றும் காா்களில் சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில் தீவிர போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.