திருநெல்வேலி

கூடங்குளம் 2ஆவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

8th May 2023 12:46 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் 2-வது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, ஞாயிற்றுக்கிழமை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணுஉலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடந்து வருகிறது.

இந்த இரு அணுஉலைகளும் வருடாந்திர பராமரிப்பு, எரிகோல்கள் நிரப்புதல் போன்ற பணிகளுக்காக குறிப்பிட்ட காலங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது 2-ஆவது அணுஉலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் 2 மாதங்கள் நடைபெற இருப்பதாகவும், அதன் பின்னா் மின் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் அணு மின்நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த 500 மெகாவாட் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT