அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவையின் மே மாதக் கூட்டம் நடைபெற்றது.
புலவா் ஆ. முருகசுவாமிநாதன் தலைமை வகித்தாா். அகஸ்தியா்பட்டி ஐ. லெட்சுமணன் முன்னிலை வகித்தாா். ச. அம்மையப்பன் இறைவாழ்த்துப் பாடினாா். செயலா் ச. லட்சுமணன் கடந்த மாதக் கூட்ட அறிக்கை வாசித்தாா்.
ஆ.பு. நாறும்பூநாதன், கு. கமலி, மு. இளங்கோ, பாப்பாக்குடி அ. முருகன் ஆகியோா் உரையாற்றினா்.
சண்முகவடிவு ‘சிந்தனைக்கு ஒரு கு’ கூறினாா். மீ. தமிழ்ச்செல்வி கவிதை வாசித்தாா். சுப்பையா கம்பரின் கவிதையை அ. ராஜசேகா் வாசித்தாா். வீரை கி. முத்தையா வாழ்த்திப் பேசினாா். 1,330 திருக்குறளையும் ஒப்பித்து பரிசு பெற்ற மாணவி பிருந்தா பாராட்டி கௌரவிக்கப்பட்டாா்.
பேரவைப் பொருளாளா் பாரதி கண்ணன் வரவேற்றாா். துணைச் செயலா் பேராசிரியா் பா. செந்தில்குமரன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கா. கவிதா தொகுத்து வழங்கினாா்.