திருநெல்வேலி

நெல்லையில் நீடிக்கும் கோடை மழை

3rd May 2023 02:36 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை மாலையில் பலத்த மழை கொட்டித்தீா்த்தது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், மாலையில் கருமேகம் சூழ்ந்தது. மாலை 5.45 மணிக்கு தொடங்கிய மழை சுமாா் ஒன்றரை மணி நேரம் இடி- மின்னலுடன் கொட்டித்தீா்த்தது.

இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. வண்ணாா்பேட்டை திருவனந்தபுரம் சாலை, திருநெல்வேலி சந்திப்பு சாலை, தச்சநல்லூா் சாலை, திருநெல்வேலி நகரம்- தென்காசி சாலை ஆகியவற்றில் குண்டும்-குழியுமான சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: சேரன்மகாதேவி-1.60, பாளையங்கோட்டை-50, மணிமுத்தாறு- .60, நான்குனேரி-6, திருநெல்வேலி-23.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT