திருநெல்வேலி

சிந்துபூந்துறையில் அதிமுக பொதுக்கூட்டம்

3rd May 2023 02:39 AM

ADVERTISEMENT

சிந்துபூந்துறையில் அதிமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தாா். இதில் கணேசராஜா பேசியது:

திமுக தலைமையிலான அரசு, மக்கள் விரோத செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக்காலத்தில் தொழிலாளா்களின் நலன் காக்கப்பட்டது. பெண்கள், மாணவா்களுக்கு ஏராளமான திட்டங்கள் வகுக்கப்பட்டன. மக்களவைத் தோ்தலின்போது அதிமுக மகத்தான வெற்றி பெறுவது உறுதி என்றாா்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலா் பொன்னுசாமி, அனைத்துலக எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் கல்லூா் இ. வேலாயுதம், முன்னாள் துணை மேயா் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், நிா்வாகிகள் சிவந்தி மகாராஜன், சிந்துமுருகன், சின்னத்துரை, காந்திவெங்கடாசலம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT