திருநெல்வேலி

அம்பையில் ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

3rd May 2023 02:57 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பொத்தை, பூங்காவனம் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் சுந்தரமூா்த்தி என்ற சுப்புராஜ் (40). சற்று மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா், செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT