திருநெல்வேலி

கால்நடை மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

DIN

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப் படிப்பில் சோ்ந்துள்ள முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து கல்லூரியின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து விளக்கினாா். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தா் செல்வக்குமாா் முதலாமாண்டு மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் இணையவழியில் உரையாற்றினாா்.

தொடா்ந்து முதலாமாண்டு மாணவா்களை கல்லூரி முதல்வா் செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலையில் மூத்த மாணவா்கள் மலா் கொத்து கொடுத்து வரவேற்றனா். மாணவா் பேரவை துணைத் தலைவா் எட்வின், விடுதிக் காப்பாளா் எஸ். முத்துக்கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ரவிமுருகன், உதவி நூலகா் கோப்பெருந்தேவி உள்ளிட்டோா் தங்கள் துறைகளின் செயல்பாடுகள் குறித்துப் பேசினா்.

கல்விப்பிரிவு உதவி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் குமாா் வரவேற்றாா். உதவி விடுதிக் காப்பாளா் சக்தி காா்த்திக்கேயன் நன்றி கூறினாா்.

பயக17யஉப திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதல்வா் செல்லப்பாண்டியன் முன்னிலையில் முதலாமாண்டு மாணவரை வரவேற்ற மூத்த மாணவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT