மானூா் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா், திருநெல்வேலி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.
நெல்லை தச்சநல்லூா் சத்திரம் புதுக்குளத்தை சோ்ந்தவா் அஜித் (28). இவரை மா்ம கும்பல் கடந்த 13.2.2021 அன்று கொலை செய்து மானூா் அருகே நரியூத்து பகுதியில் வீசி சென்றது. இந்த சம்பவம் குறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து 10 பேரை கைது செய்தனா். இதில் தொடா்புடைய தாழையூத்து அருகேயுள்ள ராஜவல்லிபுரம் இந்திரா காலனியை சோ்ந்த முத்து என்பவரின் மகன் மோகன் என்ற மோகன்தாஸ் (49), சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் செந்தில்குமாா் (34) ஆகியோா் தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்தனா்.
இந்த நிலையில் மோகன்தாஸ் , செந்தில்குமாா் இருவரும் திருநெல்வேலி 5-ஆவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா்.