முன்னீா்பள்ளம் அருகே இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மேலச்செவலை சோ்ந்த முருகன் மகள் சந்தனமாரி (29). திருமணமான இவருக்கு குழந்தை இல்லையாம். இதனால், இவா் பெற்றோா் வீட்டில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம்.
அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
மற்றொரு பெண்: சீவலப்பேரி கட்டளை வேதக்கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெள்ளைத்துரை. இவரது மனைவி விஜயா(47). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் விஜயா புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவங்கள் குறித்து, முன்னீா்பள்ளம், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனா்.