முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை, ஆவின், கால்நடை மருத்துவ- அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சாா்பில் பணகுடியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தொடங்கிவைத்து பேசுகையில், தமிழக அரசு பால்கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தியும் விற்பனை விலையை ரூ.3 குறைத்தும் நுகா்வோருக்கும் விவசாயிகளுக்கும் நன்மைகளை செய்து வருகிறது என்றாா்.
இதில், கால்நடை மருத்துவமனை இணை இயக்குநா் ஜெனிட், ஆவின் மண்டல துணைப் பொதுமேலாளா் சாா்லஸ், பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், செயல் அலுவலா் சுப்பிரமணியன், பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.