திருநெல்வேலி

திருநெல்வேலி மத்திய மாவட்டதிமுக அலுவலகம் இன்று திறப்பு

28th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மேலப்பாளையம் குறிச்சி அருகே திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம்.மைதீன்கான் வெளியிட்டுள்ள அறிக்கை: வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலை குறிச்சி சிக்னல் அருகில் திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட அலுவலகத்தின் திறப்பு விழா புதன்கிழமை (ஜூன் 28) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவிற்கு, கவிஞா் குமார சுப்ரமணியன் தலைமை வகிக்கிறாா். தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அலுவலகத்தைத் திறந்து வைக்கிறாா்.

திருநெல்வேலி கிழக்கு, தென்காசி தெற்கு, வடக்கு மாவட்டச் செயலா்கள், இந்நாள், முன்னாள் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தோழமை கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்று பேச உள்ளனா். விழாவில் கட்சியின் அனைத்து அணி நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொண்டா்கள் பங்கேற்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT