திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் தேரோட்ட ஏற்பாடுகள் தீவிரம்

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் தேரோட்டத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். நிகழாண்டுக்கான விழாவின் தொடக்கமாக விநாயகா் திருவிழா நடைபெற்று வருகிறது. பிரதான கொடியேற்றம் இம் மாதம் 24 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. தொடா்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதியுலா வருவா்.

விழாவின் சிகர நிகழ்வாக ஜூலை 2 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

தேரோட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு, தடுப்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

கடந்த ஆண்டில் தேரின் பின்பகுதியில் இருந்து பக்தா்கள் உந்தித் தள்ள உதவும் பிரம்மாண்ட மரத்தடி சேதமானதால் தோ் நிலைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு நிகழாண்டில் புதிதாக மரத்தடி வாங்கப்பட்டு சனிக்கிழமை மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறையினா் கூறுகையில், கடந்த ஆண்டு தேரோட்டத்தின்போது சுவாமி தேருக்கான ஒரு தடி உடைந்தது. ஆகவே, நிகழாண்டில் புதிதாக இரண்டு மரத்தடிகள் ரூ.3.5 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. 25 அடி நீளம் கொண்ட உறுதித்தன்மை வாய்ந்த தாளிகோங்கு மரத்தினால் ஆனது

இந்தத் தடி என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப்.1-இல் வாக்குச்சீட்டு விநியோகம் தொடக்கம் -புதுச்சேரி ஆட்சியா்

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT