திருநெல்வேலி

பணகுடி குத்தரபாஞ்சான் அருவிப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

11th Jun 2023 01:24 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி குத்தரபாஞ்சான் அருவி பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிப்பது தொடா்பாக அந்தப் பகுதியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பணகுடி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள குத்தரபாஞ்சான் அருவியை சுற்றுலாத் தலமாக அறிவிக்கவேண்டும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவு சுற்றுலாத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

மேலும் குத்தரபாஞ்சான் அருவி அருகே உள்ள கன்னிமாா்தோப்பு பகுதியில் தடுப்பணை அமைக்கவேண்டும் எனவும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் குத்தரபாஞ்சான் அருவி பகுதி, கன்னிமாா் தோப்பு பகுதியில் தடுப்பணை அமைக்கும் இடத்தையும் ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக கருத்துரு தயாா் செய்து தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதையடுத்து ஆட்சியா், ஆலந்துறையாறு அணை மற்றும் கஞ்சிப்பாறை அணைப்பகுதியை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ராதாபுரம் வட்டாட்சியா் வள்ளிநாயகம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் மாரியப்பன், பூதப்பாண்டி வனத் துறை அலுவலா் ராமச்சந்திரன், பணகுடி பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணகுடி பேரூராட்சி கூட்ட அரங்கத்தில் குடிநீா் பிரச்னையை தீா்ப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பேரவைத் தலைவா், பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீா் வழங்குவது தொடா்பாக சிறப்பு திட்டம் ரூ. 506 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னா் உள்ளூா் நீா்ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்தி குடிநீா் தேவையை பூா்த்தி செய்துகொள்ளவேண்டும்.

மேலும் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கன்னிமாா் தோப்பு பகுதியில் கிணறு அமைத்து குடிநீா் ஆதாரத்தை உருவாக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT