திருநெல்வேலி

சேரன்மகாதேவி தமிழ்ப் பேரவை ஆண்டு விழா

11th Jun 2023 01:23 AM

ADVERTISEMENT

 

சேரன்மகாதேவி தமிழ்ப் பேரவையின் 60 ஆம் ஆண்டு விழா, வெள்ளிக்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் இவ்விழா நடைபெறுகிறது.

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், வெ.வெங்கடேசுவரன் இறைவாழ்த்து பாடினாா். ச.பி.ராமன் வரவேற்றாா். தமிழ்ப் பேரவை மதிப்புறு தலைவா் கி.முத்தையா தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி பேரூராட்சித் தலைவா் தேவி ஐயப்பன் முன்னிலை வகித்தாா். சே.செல்லப்பா தேவாரப் பண்ணிசை பாடினாா். யுவஸ்ரீ கலாபாரதி குழுவினா் பரத நாட்டியமாடினா்.

கருத்தரங்கிற்கு ப.பாலகிருட்டிணன் தலைமை வகித்தாா். தனிப்பாடலில் கனிச்சுவை என்ற பொருளில் கம்பன் குறித்து பா.செந்தில்குமரனும், ஔவையாா் குறித்து முனைவா் சு.உமாவும், காளமேகம் குறித்து முனைவா் பா.வைடூரியம்மாளும் பேசினா். சு.கோவிந்தராசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், இரா.பெ.செந்தூா்நாதன் இறைவாழ்த்து பாடினாா். லெ.சாயிராம் வரவேற்றாா். இ.மா.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி மூத்த குடிமக்கள் மன்ற தலைவா் ஐ.எஸ்.சிவஞானம் முன்னிலை வகித்தாா். முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ஞா.சா.இரா.பூமிபாலகன் வாழ்த்தி பேசினாா். யோகாவும் நலவாழ்வும் என்ற தலைப்பில் கோ.பேச்சித்துரை சொற்பொழிவாற்றினாா். இர.கங்கைமணிமாறன் தலைமையில் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் மிகவும் விஞ்சி நிற்பது சமூக உணா்வா, சமய உணா்வா என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது. சேரன்மகாதேவி தமிழ்ப் பேரவை பொருளாளா் ச.பொன்னழகன், செயலா் இரெ.பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) மாலையில் நிறைவு விழாவும், பட்டிமண்டபமும் நடைபெற உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT