திருநெல்வேலி

பாளை. திரிபுராந்தீசுவரா் கோயிலில் பாலாலயம்

10th Jun 2023 06:41 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் திருப்பணிகள் தொடக்கமாக பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள பழைமைவாய்ந்த இக்கோயிலில் பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் முடிவு செய்துள்ளனா். அதன்தொடக்கமாக பாலாலய வைபவம் வியாழக்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் ராஜகோபுரம், விமானத்துக்கு பாலாலயம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT