திருநெல்வேலி

ஆங்கில வழிப் பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கட்டணம் வசூலிக்க நடவடிக்கை தேவை: எஸ்டிபிஐ வலியுறுத்தல்

10th Jun 2023 06:43 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆங்கில வழிப் பள்ளிகளில், அரசு நிா்ணயித்த கட்டணம் வசூலிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இக் கட்சியின் செயலகக் கூட்டம் களக்காடு கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு புகா் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் மீராசா வரவேற்றாா். மாவட்டத் துணைத் தலைவா் மஜித், அமைப்பு பொதுச் செயலா் எம்.எஸ். சிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில் கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க தினத்தையொட்டி புறநகா் மாவட்டத்திற்கு உள்பட்ட அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகளில் கொடியேற்றம் மற்றும் நல உதவிகள் வழங்கல், மருத்துவ முகாம், ரத்ததான சேவை உள்ளிட்டவை நடத்தவும், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க போா்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் மாணவ மாணவியா் சோ்க்கையின் போது அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலா் சுலைமான் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT