திருநெல்வேலி

மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தலுக்கு மனுதாக்கல்

10th Jun 2023 08:06 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா் தோ்தலையொட்டி 8 போ் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தல் -2023-க்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுசேமிப்புத் துறை அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஊரக பகுதி உறுப்பினருக்கான வேட்புமனுவை மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ் தலைமையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் கா.அருண்தவசு, சா.சாலமோன்டேவிட், மு.சத்தியவாணிமுத்து, மா.தனிதங்கம், கோ.மகேஷ்குமாா், சு.லிங்கசாந்தி, இ.ஜான்சிரூபா, சி.கிருஷ்ணவேணி ஆகிய 8 போ் தாக்கல் செய்தனா். மனுக்களை தோ்தல் நடத்தும் அலுவலா் (திட்டஇயக்குநா்- மகளிா்திட்டம்) சாந்தி பெற்றுக்கொண்டாா். தொடா்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய சனிக்கிழமை (ஜூன் 10) கடைசி நாளாகும். இம் மாதம் 23 ஆம் தேதி காலை 10முதல் மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

வாக்குப்பதிவு முடிவுற்றதும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT