திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்றம்

10th Jun 2023 08:07 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 2023 ஆம் ஆண்டுக்கான நுகா்வோா் நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூன் 10) திருநெல்வேலி மாவட்டத்தின் 9 வட்டங்களிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவால் நடைபெற உள்ளது.

இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நுகா்வோா் நீதிமன்ற வழக்குகள், இதர வழக்குகள் என மொத்தம் 315 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலை 9.30 மணிக்கு சிறப்பு மக்கள் நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிபதி முன்னிலையில் நடைபெற உள்ளது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT