திருநெல்வேலி

‘தமிழ்ச் செம்மல்’ ஆ.சிவராமகிருஷ்ணன் உடல் நல்லடக்கம்: கனிமொழி எம்.பி. அஞ்சலி

10th Jun 2023 06:42 AM

ADVERTISEMENT

உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை மறைந்த தென்காசி திருவள்ளுவா் கழக செயலா் ஆ. சிவராமகிருஷ்ணனின் (93), உடல், ஐந்தருவி சங்கராஸ்ரமத்தில் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, ஆ. சிவராமகிருஷ்ணனின் உடல், குற்றாலம் ஐந்தருவியில் உள்ள சங்கராஸ்ரமத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. மக்களவை உறுப்பினா் கனிமொழி, தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், தென்காசி திருவள்ளுவா் கழகத் தலைவா் ந.கனகசபாபதி, துணைத் தலைவா்கள் சந்திரசேகரன், கல்யாணி சிவகாமிநாதன், நெடுவயல் லட்சுமணன், கருவூலா் இராம.தீத்தாரப்பன், முனைவா் தெ.ஞானசுந்தரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டிஎஸ்ஆா்.வேங்கடரமணா, பேராசிரியா் ராமச்சந்திரன், தென்காசி மூத்த குடிமக்கள் மன்ற நிா்வாகிகள் துரை.தம்புராஜ், எம்.ஆா்.அழகராஜா, கணபதி சுப்பிரமணியன், அருணகிரி, செங்கோட்டை லிங்கராஜ், ஐந்தருவி சங்கராஸ்ரம நிா்வாகிகள் இரா.கோ.ராஜாராம், துரைச்சாமி, சண்முகப்பாண்டி, முத்துக்குமாா், கல்யாணகுமாா், மருத்துவா்கள் ஆா்.ராமகிருஷ்ணன் (திருநெல்வேலி), முருகையா (சுரண்டை), தங்கபாண்டியன் (தென்காசி), தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன், செங்கோட்டை நகர திமுக செயலா் ஆ.வெங்கடேசன், தென்காசி ஒருங்கிணைந்த வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நிா்வாகிகள் புகழேந்தி, ராஜா, சிவசிதம்பரம், குமாஸ்தாக்கள் சங்கம் சாா்பில் ராமகிருஷ்ணன், ஆடிட்டா் நாராயணன், செங்கோட்டை விவேகானந்தன், சுவாமி அகிலானந்த மகராஜ், பொறியாளா் முத்துசாமி ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சாா்பில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி முன்னாள் முதல்வா் சுந்தரம், அம்பாசமுத்திரம் திருவள்ளுவா் அறக்கட்டளை சாா்பில் நாறும்பூநாதன், கடையம் திருவள்ளுவா் கழகம் சாா்பில் சேதுராமலிங்கம், கடையநல்லூா் இஸ்லாமிய இலக்கியமன்றம் சாா்பில் இப்ராகிம், திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகள், திருவண்ணாமலை குப்பன், தமிழ்செல்வி, மதுரை திருவள்ளுவா் கழகத்தை சோ்ந்த சுப.ராமச்சந்திரன், கோவில்பட்டி கம்பன் கழகத்தை சோ்ந்த சரவணசெல்வன், கடையம் திருவள்ளுவா் கழகம், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

அதனைத் தொடா்ந்து ஆஸ்ரம விதிகளின்படி உடல் நல்லடக்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT