திருநெல்வேலி

எஸ்டிபிஐ மண்டல கூட்டம்

10th Jun 2023 06:40 AM

ADVERTISEMENT

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மண்டல கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மற்றும் திருநெல்வேலி மண்டல தலைவா் ஜுல்பிகா் அலி தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது வரவேற்றாா்.

திருநெல்வேலி மாநகா், புகா், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத் தலைவா்கள், பொதுச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி இம் மாதம் 21 ஆம் தேதி கட்சியின் அனைத்து மட்ட அளவில் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில், தோ்தல் தொடா்பான களப்பணிகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத் தலைவா் சிக்கந்தா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT