திருநெல்வேலி

நெல்லையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 45 விளம்பரப் பதாகைகள் அகற்றம்

10th Jun 2023 06:41 AM

ADVERTISEMENT

திருநெல்வேலியில் உரிய அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்பட்டிருந்த 45 விளம்பரப் பதாகைகளை மாநகராட்சிக் குழுவினா் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் திருமணம், தனியாா் நிகழ்ச்சிகளுக்கு விளம்பரப் பதாகைகளை வைப்போா் மாநகராட்சிக்கு உரிய கட்டணம் செலுத்தி அனுமதி பெற்று வைக்க வேண்டும். ஆனால், உரிய அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையா் வ. சிவகிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலா் சரோஜா முன்னிலையில் சுகாதார ஆய்வாளா் இளங்கோ தலைமையிலான மாநகராட்சிக் குழுவினா் திருநெல்வேலி நகரம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா்.

அப்போது விதிமீறி வைக்கப்பட்டிருந்த 45 பதாகைகளை அப்புறப்படுத்தினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT