திருநெல்வேலி

விஜயநாராயணம் அருகே காா் மோதி குழந்தை பலி: ஓட்டுநா் கைது

10th Jun 2023 06:41 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே பரப்பாடியில் காா் மோதி குழந்தை இறந்தது தொடா்பாக ஓட்டுநரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பரப்பாடி அருகே உள்ள பாண்டிச்சேரியைச் சோ்ந்தவா் ராஜதுரை. இவரது மகள் சுகாஷினி(3). வியாழக்கிழமை இரவு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சுகாஷினி மீது அந்த வழியாக வந்த காா் மோதியதாம். இதில் காயமடைந்த சுகாஷினியை நான்குனேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் திருநெல்வேலி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது.

இது தொடா்பாக விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சோ்ந்த காசி மகன் ஜெயபாலனை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT