திருநெல்வேலி

சிந்துபூந்துறை எரிவாயு தகன மேடை ஜூன் 15 முதல் ஒரு மாதம் இயங்காது

9th Jun 2023 02:27 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் உள்ள எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ஒரு மாதத்துக்கு தகன மேடை செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூா் மண்டல அலுவலகத்திற்குட்பட்ட வாா்டு எண் 12 சிந்துபூந்துறை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நவீன எரிவாயு தகன மேடையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு நவீன எரிவாயு தகன மேடை இயங்காது. அதுவரையில்,

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்திலுள்ள நவீன எரிவாயு தகன மேடையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என க் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT